கள்ளக்காதலனுக்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி அலிகாரில் நடந்த பகீர் கொலை சம்பவம்

கள்ளக்காதலனுக்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி அலிகாரில் நடந்த பகீர் கொலை சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கங்கிரி பகுதியில் லலிதா என்ற பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் ரிஷி குமாரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லலிதாவுக்கும் அவரது கணவரின் உறவுமுறை தம்பியான தேவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது திருமணத்திற்கு முன்பே தொடங்கிய இந்த உறவு, திருமணத்திற்கு பிறகும் நீடித்தது. இதனால் தனது கணவனை ஒரு தடையாக கருதிய லலிதா, தனது காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

ஜூன் 17ஆம் தேதி இரவு, உடல்நிலை சரியில்லை என்று கூறி லலிதா தனது கணவரை ஏமாற்றியுள்ளார். அந்த சமயத்தில் திட்டமிட்டபடி ரிஷி குமார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். முதலில் திருட்டுப் பழியைச் சுமத்தி நாடகமாடிய லலிதா, போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். தனது காதலுக்கு தடையாக இருந்த கணவனை தீர்த்துக்கட்டவே இந்த கொலையை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான ரிஷி குமார், தற்போது மனைவியின் கள்ளக்காதலுக்கு பலியாகியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *