கோடிகளில் விலை போகும் இரண்டு தலை பாம்புகள் மற்றும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி உண்மைகள்

கோடிகளில் விலை போகும் இரண்டு தலை பாம்புகள் மற்றும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி உண்மைகள்

சர்வதேச சந்தையில் ‘சாண்ட் போவா’ எனப்படும் மண்ணுளி பாம்புகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இவை முக்கியமாக பாலுணர்வு ஊக்க மருந்து தயாரிப்பிலும் மாந்திரீக சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் கங்கை கரையோர மணல் பகுதிகளில் காணப்படும் இந்த பாம்புகளை பிடிப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இருந்தபோதிலும், வெளிநாடுகளில் இதன் தோலால் செய்யப்படும் பொருட்களுக்கு அதிக மற்கேற்பு உள்ளது.

உண்மையில் இந்த பாம்பிற்கு இரண்டு தலைகள் கிடையாது, இதன் வால் பகுதி பார்ப்பதற்கு தலை போன்றே இருப்பதால் இது இருதலை பாம்பு என அழைக்கப்படுகிறது. விஷமற்ற இந்த பாம்புகள் மணலுக்கு அடியில் வாழ்கின்றன. ஏழை பாம்பு பிடிப்பவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கும் கடத்தல்காரர்கள், இவற்றை வெளிநாட்டு சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கு விற்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *