சனி பகவானின் அருளால் பிப்ரவரி 20 வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் மற்றும் பணமழை பொழியப்போகிறது

ஜோதிட சாஸ்திரத்தின்படி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவானின் இயக்கத்தில் ஒரு அரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 20, 2026 வரை சனி பகவான் ‘பால பருவத்தில்’ (0 முதல் 6 டிகிரி வரை) பயணிப்பதால் அதன் கடுமை குறையும். இதன் விளைவாக ஏழரை சனி அல்லது அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த காலகட்டத்தில் பெரும் மன நிம்மதியையும் நிதி ரீதியான முன்னேற்றத்தையும் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிஷபம், கன்னி மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். ரிஷப ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் வருமான உயர்வும் கிடைக்கும். கன்னி ராசியினருக்கு தடைப்பட்ட அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடிவதோடு சொத்து சேர்க்கையும் உண்டாகும். சிம்ம ராசியினருக்கு எதிர்பாராத பணவரவும் பழைய நோய்களில் இருந்து விடுதலையும் கிடைக்கும். நேர்மையான வழியில் நடப்பவர்களுக்கு மட்டுமே சனியின் இந்த முழுமையான அருள் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.