திருமணமான ஒரு மணி நேரத்தில் விவாகரத்து கோரிய ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை
December 30, 2025

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நீண்ட கால காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட ஜோடி, மணமான ஒரே மணி நேரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தால் கணவர் பிரிவை நாட, மனைவி சுமார் 34 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தம்பதியினருக்கு இடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பு இன்னும் நீடிப்பதாகக் கூறி விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார். மேலும், இருவரும் சேர்ந்து தேனிலவு செல்ல வேண்டும் என வியக்கத்தக்க தீர்ப்பை வழங்கினார். நீதிமன்றத்தின் இந்த விசித்திரமான தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.