வேலை கிடைக்க வினோத உத்தி பாதியாக அச்சிடப்பட்ட ரெஸ்யூமேவை அனுப்பி அதிர்ச்சியூட்டிய இளைஞர்

வேலை கிடைக்க வினோத உத்தி பாதியாக அச்சிடப்பட்ட ரெஸ்யூமேவை அனுப்பி அதிர்ச்சியூட்டிய இளைஞர்

வேலை தேடும் இளைஞர் ஒருவர் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தில், விண்ணப்பதாரர் தனது ரெஸ்யூமேவை பாதியாக அச்சிட்டு அனுப்பியுள்ளார். மீதமுள்ள காலியான பகுதியில், என்னுடைய முழு திறமையை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் எனக்கு வேலை கொடுங்கள் என்று பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த ரெஸ்யூமேவில் அவருடைய முகத்தின் ஒரு பகுதியும் தொழில் நோக்கமும் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

இந்த வினோதமான முயற்சி சமூக வலைதளங்களில் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. சிலர் இதை வேடிக்கையாக பார்த்தாலும், மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் பலரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், அந்த இளைஞரின் துணிச்சலைப் பாராட்டி நேர்காணலுக்கு அழைக்கலாம் என்று கூறியுள்ளார். பிரிண்டர் கோளாறு என சிலர் கிண்டல் செய்தாலும், வேலையில் சேர ஒரு விண்ணப்பதாரர் மேற்கொண்ட இந்த புதுமையான மற்றும் கிளிக் செய்யத் தூண்டும் அணுகுமுறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *