ஓடும் ரயிலில் காதலன் கரம் பிடித்த திருமணமான இளம்பெண்

ஓடும் ரயிலில் காதலன் கரம் பிடித்த திருமணமான இளம்பெண்

பீகாரின் சுல்தான்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, விருப்பமின்றி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனினும், தனது காதலனை மறக்க முடியாத அந்தப் பெண், புதன்கிழமை அன்று சந்தைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனுடன் ரயிலில் ஏறி, சக பயணிகள் முன்னிலையில் ரயிலிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த வினோத திருமணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் தனது பழைய குங்குமத்தை அழித்துவிட்டு, காதலனிடம் மீண்டும் குங்குமம் இடச் சொல்லி அந்தப் பெண் வேண்டுகோள் விடுத்தார். தற்போது இந்த ஜோடி ஊரை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *