அமெரிக்காவையே அதிரவைத்த ஆர்பிஐ அதிரடி நடவடிக்கையால் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொண்ட ‘ஃபாரெக்ஸ் ஸ்வாப்’ (Forex Swap) உத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் 2025-ல் ரிசர்வ் வங்கி 11.9 பில்லியன் டாலர்களை விற்பனை செய்த போதிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டு கால அந்நியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் மூலம், சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்ததுடன், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் ஆர்பிஐ இந்த மாஸ்டர்ஸ்டிரோக் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
டிசம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 4.37 பில்லியன் டாலர் உயர்ந்து, 693.32 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், ரஷ்யா மற்றும் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த வலுவான கையிருப்பு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இறக்குமதி செலவுகளைக் குறைக்கவும் இந்தியாவிற்கு பெரும் உதவியாக இருக்கும்.