கேரளாவின் இந்த மர்ம கிராமத்தில் ஏன் இரட்டையர்கள் மட்டுமே பிறக்கிறார்கள் உலகமே வியக்கும் அதிசயம்

கேரளாவின் இந்த மர்ம கிராமத்தில் ஏன் இரட்டையர்கள் மட்டுமே பிறக்கிறார்கள் உலகமே வியக்கும் அதிசயம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடினி கிராமம் தற்போது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய புதிராக மாறியுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் சுமார் 2000 குடும்பங்களில் 400 ஜோடி இரட்டையர்கள் உள்ளனர், இதனால் இந்த கிராமம் ‘இரட்டையர் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த விசித்திரமான நிகழ்வு இன்றும் தொடர்கிறது. வெளியூரில் இருந்து இந்த கிராமத்தில் குடியேறிய தம்பதிகளுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த வியத்தகு நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். விஞ்ஞானிகள் குழுவினர் கிராம மக்களின் உமிழ்நீர் மற்றும் முடி மாதிரிகளை சேகரித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான உறுதியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது மரபணு காரணங்களால் இருக்கலாம் என்று கேரள மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வுகள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *