ஜப்பானிய பெண்கள் 100 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதன் பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான உண்மைகள்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 95,000-ஐத் தாண்டியுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பதுதான். 1963-ஆம் ஆண்டில் வெறும் 153-ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜப்பானின் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு மற்றும் முதியோர்களுக்கான சமூக ஆதரவு ஆகியவை இந்த வியக்கத்தக்க மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு அவர்களின் பாரம்பரிய உணவு முறையும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுமே முக்கிய ரகசியமாகும். மீன், காய்கறிகள் மற்றும் கிரீன் டீ போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்கள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கு எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஜப்பானிய மாடலை பின்பற்றி உணவுக் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்தால், இந்தியர்களும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.