10 ஆண்டுகளுக்கு பிறகு சாமியார் வேடத்தில் வந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

டெல்லியின் நெப் சராய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரைச் சேர்ந்த பிரமோத் குமார் ஜா (60) மற்றும் அவரது மனைவி கிரண் ஜா (50) ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். புதன்கிழமை அதிகாலையில், தனது அடையாளத்தை மறைக்க சாமியார் வேடமிட்டு வந்த பிரமோத், டெல்லியில் இருந்த மனைவியின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார்.
குடும்ப வன்முறை காரணமாகவே கிரண் தனது மகனுடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார். தற்காப்புக்காக சாமியார் வேடம் தரித்து வந்த கணவன், அதிகாலையில் மனைவியை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது மருமகள் அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பிரமோத் குமாரை கைது செய்தனர். இந்த திட்டமிட்ட கொலை சம்பவம் டெல்லி முதல் பீகார் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.