சொத்துக்காக பெற்ற தாயை கொன்று புதைத்த மகன் செய்த விபரீத முடிவு

மகாராஷ்டிராவின் லாத்தூர் அருகே ரேனாப்பூர் பகுதியில் சொத்து தகராறில் 80 வயது தாயைக் கொன்று நிலத்தில் புதைத்த மகன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தை விற்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மகன் காசாசாகேப் யாதவ் தனது தாய் சமிந்திராபாயை அடித்துக் கொன்று கரும்புத் தோட்டத்தில் புதைத்துள்ளார். தாயின் சடலத்தை மறைத்த பிறகு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வியாழக்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் நிலம் விற்பதை தாய் எதிர்த்ததால் ஆத்திரமடைந்த மகன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. உயிரிழந்த மகனின் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் ஊர் மக்கள் முன்னிலையில் தாய் மற்றும் மகன் இருவருக்கும் ஒரே சிதையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.