பசிக்கொடுமையால் ஒரு சிறுநீரகத்தை விற்கும் அவல நிலையில் ஒரு கிராமமே தவிக்கிறது

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகிலுள்ள ஷென்ஷாய்பா பஜார் கிராமம் ‘ஒற்றைச் சிறுநீரக கிராமம்’ என்று அழைக்கப்படும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என பெரும்பாலானோர் தங்களின் ஒரு சிறுநீரகத்தை விற்றுவிட்டனர். கடும் வறுமை மற்றும் பசி காரணமாக, குடும்பத்திற்கு உணவு வழங்க வேறு வழியின்றி இந்த விபரீத முடிவை அவர்கள் எடுக்கின்றனர். உடல்நலக் குறைபாடுகளை விட, வயிற்றுப்பசியே இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது என்பதுதான் வேதனையான உண்மை.
தாலிபான்களின் ஆட்சிக்கு பிறகு பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால், இக்கிராம மக்கள் கள்ளச்சந்தையில் தங்கள் சிறுநீரகத்தை விற்கின்றனர். ஒரு சிறுநீரகத்திற்கு சுமார் இரண்டரை லட்சம் ஆப்கானி ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த பணத்தைக் கொண்டு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருகின்றனர். ஒருவேளை உணவிற்காக மனித உடலின் முக்கிய உறுப்பையே பணயம் வைக்கும் இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.