அமெரிக்காவில் குடும்பத்தினரை மிரட்டிய இந்திய வம்சாவளி மாணவர் கைது
December 28, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டியும் வீட்டை தீயிட்டு கொளுத்தப் போவதாகவும் அச்சுறுத்திய 22 வயது இந்திய வம்சாவளி மாணவர் மனோஜ் சாய் லாலா கைது செய்யப்பட்டுள்ளார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவரை ஃபிரிஸ்கோ போலீசார் கடந்த திங்கட்கிழமை அதிரடியாக கைது செய்தனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மனோஜ் சாய் லாலா மீது பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அளித்த தகவலின் பேரில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.