ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் ஆனால் அந்த இருவருக்கும் தந்தை வேறு வேறு நபர்கள்

ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் ஆனால் அந்த இருவருக்கும் தந்தை வேறு வேறு நபர்கள்

போர்ச்சுகல் நாட்டின் மினிரோஸ் நகரில் 19 வயது இளம்பெண் ஒருவர் பிரசவித்த இரட்டை குழந்தைகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. டிஎன்ஏ பரிசோதனையில் அந்த இரு குழந்தைகளுக்கும் தந்தை வேறு வேறு நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஒரே நாளில் இரு வேறு நபர்களுடன் உறவு கொண்டதே இந்த அரிய நிகழ்வுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தற்போது 16 மாதங்களாகும் அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர்.

மருத்துவ ரீதியாக இது ‘ஹெட்டோரோபேரண்டல் சூப்பர்ஃபெகண்டேஷன்’ என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் துலியோ ஜார்ஜ் பிராங்கோ கூறுகையில், உலகம் முழுவதும் இதுவரை 20 முறை மட்டுமே இத்தகைய அரிதான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்றார். தாயின் இரு வேறு கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுற்றதால் இது நிகழ்ந்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணின் தற்போதைய துணையே இரு குழந்தைகளுக்கும் தந்தையாக இருந்து பராமரித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *