அகமதாபாத்தில் அதிரடி! சஞ்சு அடித்த பந்து பட்டு நடுவர் சரிவு, ஹர்திக் ஷாட்டில் கேமராமேன் காயம்
December 20, 2025

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டியின் போது மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சஞ்சு சாம்சன் அடித்த வேகமான பந்து நடுவர் ரோகன் பண்டிட்டின் முழங்காலைத் தாக்கியதில் அவர் வலியால் துடித்தார். இதனால் ஐந்து நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு, இரு அணி மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் பணியைத் தொடர்ந்தார்.
மறுபுறம், ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் எல்லைக்கோட்டிற்கு வெளியே இருந்த கேமராமேனைத் தாக்கியது. கேமராவில் கவனம் செலுத்தியதால் பந்தை கவனிக்காத அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது