குளிர்காலத்தில் மூட்டு வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறதா இதன் பின்னணியில் உள்ள ஆபத்து என்ன

குளிர்காலத்தில் மூட்டு வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறதா இதன் பின்னணியில் உள்ள ஆபத்து என்ன

குளிர்காலத்தில் தாகம் குறைவாக எடுப்பதால் நீர் உட்கொள்ளல் குறைகிறது, இதனால் உடலில் உள்ள யூரிக் அமிலம் சரியாக வெளியேறாமல் மூட்டுகளில் படிகங்களாகப் படிந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் அசைவ உணவுகள், முட்டை மற்றும் உலர் பழங்கள் போன்ற அதிக பியூரின் கொண்ட உணவுகளை உண்பதும், போதிய உடற்பயிற்சி இல்லாததும் இந்த பாதிப்பை அதிகரிக்கிறது. இது மூட்டுகளில் வீக்கத்தையும் நடப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

யூரிக் அமிலம் நீண்ட காலம் அதிகமாக இருந்தால் அது ‘கவுட்’ எனப்படும் தீவிர வாத நோய்க்கு வழிவகுக்கும். காலையில் எழுந்தவுடன் கால் விரல்கள் அல்லது முட்டிகளில் கடும் வலி இருந்தால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். மதுவைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் அன்றாட உடற்பயிற்சி மூலம் இந்தப் பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *