குளிர்காலத்தில் உங்கள் பச்சிளம் குழந்தையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்

குளிர்காலத்தில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. குழந்தையின் உடல் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் இருப்பது, கை, கால் மற்றும் வயிறு சூடாக இருப்பது போன்றவை தீவிர பாதிப்பின் அறிகுறிகளாகும். குறிப்பாக, குழந்தை சரியாக பால் குடிக்க மறுத்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக மந்தமாக இருந்தாலோ, அதை வெறும் சளி என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் குழந்தையின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை எளிதில் தாக்கும். குழந்தையைத் தொடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவதும், தூய்மையான ஆடைகள் மற்றும் படுக்கையைப் பயன்படுத்துவதும் மிக முக்கியம். வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது இடைவிடாத அழுகை போன்றவை குழந்தையின் உடலில் ஏற்பட்டுள்ள தொற்றுநோயைக் குறிக்கலாம். எனவே, முறையான தடுப்பூசி மற்றும் தூய்மையான பராமரிப்பு மூலம் மட்டுமே குழந்தையைப் பாதுகாக்க முடியும்.