ரூ. 10,000-க்கு பலமுறை விற்கப்பட்ட சகோதரிகள்! தேடுதல் வேட்டையில் வெளிவந்த பகீர் உண்மை

ரூ. 10,000-க்கு பலமுறை விற்கப்பட்ட சகோதரிகள்! தேடுதல் வேட்டையில் வெளிவந்த பகீர் உண்மை

வைஷாலியைச் சேர்ந்த இரு சகோதரிகள் வீட்டை விட்டு வெளியேறியபோது, அரவணைப்பது போல் நடித்த கும்பல் அவர்களை மோதிஹாரிக்கு கடத்திச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியது. இதில் மூத்த சகோதரி வெறும் 10,000 ரூபாய்க்கு பலமுறை கைமாற்றப்பட்டு, இறுதியாக ஒருவருக்கு விற்கப்பட்டார். அவர் பெண்ணைத் திருமணம் செய்து விருந்து வைத்தபோது போலீஸார் அவரை மீட்டனர்.

மற்றொரு சோதனையில் இளைய சகோதரியும் மீட்கப்பட்டார். இந்த மனிதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ரயில் நிலையங்களில் தஞ்சம் புகும் அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *