ஜான்பூரில் சாமியார்கள் மீது கொடூரத் தாக்குதல்: வைரல் வீடியோவால் உபி-யில் பரபரப்பு!
December 18, 2025

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் இரு சாமியார்கள் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கடத்தல் சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தடியடி மற்றும் பெல்ட்டுகளால் சரமாரியாகத் தாக்கியது. மேலும், அவர்களை வலுக்கட்டாயமாக காயத்ரி மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க சாமியார்கள் ஓடியபோது, அவர்களை விரட்டிச் சென்று தாக்கியதில் ஒருவர் சாக்கடையில் விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜான்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.