எத்தியோப்பியாவின் உயரிய குடிமை விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

எத்தியோப்பியாவின் உயரிய குடிமை விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் மிக உயரிய குடிமை விருதான ‘கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டுள்ளது. இந்த கௌரவத்தை இந்திய மக்கள் அனைவருக்கும் சமர்ப்பித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை தனது உரையில் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்திய ஆசிரியர்கள் மற்றும் வணிகர்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமை குறித்து பேசினார். இதுவரை 28 நாடுகள் பிரதமர் மோடிக்கு தங்களது நாட்டின் மிக உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் சர்வதேச செல்வாக்கை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *