எச்சரிக்கை யூபிஐ மூலம் ஒரே ஒரு க்ளிக் 805 கோடி ரூபாய் அபேஸ் மக்கள் அதிர்ச்சி
December 17, 2025

நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை யூபிஐ மோசடிகள் மூலம் 805 கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.64 லட்சம் பேர் இந்த சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட தொகை சற்று குறைந்திருந்தாலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உள்ள அபாயம் இன்னும் குறையவில்லை என்பதே நிதர்சனம்.
தொழில்நுட்ப கோளாறுகளை விட, அதிகரித்து வரும் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தியே மோசடி கும்பல் கைவரிசை காட்டுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரசு தற்போது ஏஐ தொழில்நுட்பம் மற்றும் ‘சக்ஷு’ போர்ட்டலைப் பயன்படுத்தி வருகிறது. பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.