மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
December 17, 2025

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதா 2025’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை எதிர்த்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். டிசம்பர் 28-ஆம் தேதி கிராமங்கள் தோறும் காந்தியின் உருவப்படத்துடன் ஊர்வலங்கள் நடத்தி காங்கிரஸ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவுள்ளது.