செயலிழந்த சிறுநீரகத்தை மீண்டும் சீராக்கும் மருத்துவ உலகின் புதிய புரட்சி

செயலிழந்த சிறுநீரகத்தை மீண்டும் சீராக்கும் மருத்துவ உலகின் புதிய புரட்சி

பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீண்டும் ஆரோக்கியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உடா ஹெல்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடலில் உள்ள ‘செராமைடு’ என்ற கொழுப்பு செல்கள் சிறுநீரகத்தின் ஆற்றல் மையமான மைட்டோகாண்ட்ரியாவைத் தாக்குவதே பாதிப்புக்கு முக்கிய காரணம். எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், ஒரு குறிப்பிட்ட மருந்து இந்த பாதிப்பைத் தடுத்து சிறுநீரகத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கும் வெற்றிகரமாக அமைந்தால், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் அவசியம் குறையும். தற்போது இது ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. முறையான மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இது பொதுப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *