பெங்களூரு பெண்ணை மிரட்டி 2 கோடி ரூபாய் மற்றும் சொத்துக்களை பறித்த சைபர் கும்பல்
December 17, 2025

பெங்களூருவில் 57 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 2.05 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்போவதாக மிரட்டிய கும்பல், போலீஸ் உடையில் வீடியோ கால் மூலம் அவரை பல மாதங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தது.
தன் மகனின் உயிருக்கு ஆபத்து என்று அஞ்சிய அந்த பெண், மாலூர் மற்றும் விக்னான் நகரில் இருந்த நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை விற்று பணத்தை அனுப்பியுள்ளார். வங்கி கடன் பெற்றும் மோசடி கும்பலுக்கு அவர் பணம் செலுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.