பாஜகவை வீழ்த்த கைகோர்க்கிறாரா சரத் பவார்

பாஜகவை வீழ்த்த கைகோர்க்கிறாரா சரத் பவார்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் அஜித் பவாரின் என்சிபி-க்கு எதிராக ‘நட்பு ரீதியான போட்டியை’ பாஜக அறிவித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள அஜித் பவாருக்கு ஆதரவாக அவரது சித்தப்பா சரத் பவார் களம் இறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பாஜகவின் ஆதிக்கத்தைத் தடுக்கவும், அக்கட்சிக்கு சாதகமான சூழலைத் தவிர்க்கவும் பவார் குடும்பம் ரகசியமாக இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், என்சிபி தலைவர்கள் அமித் ஷாவைச் சந்தித்து கூட்டணியைத் தொடர வலியுறுத்தியுள்ளனர். பாஜக தனது கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்தி விட்டு, பின்னர் அவற்றையே அழிப்பதாக ரோஹித் பவார் குற்றம் சாட்டியுள்ளார். தாக்கரே சகோதரர்களைப் போல, பவார் குடும்பமும் மீண்டும் இணைந்தால் அது மகாராஷ்டிர அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *