உஜ்ஜைனியில் கொடூரம் ஒன்பது வயது சிறுமி அடித்துக் கொலை

உஜ்ஜைனியில் கொடூரம் ஒன்பது வயது சிறுமி அடித்துக் கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று தோல்வியுற்ற அண்டை வீட்டு இளைஞன், அவரை கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளான். விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமியை தனிமையில் பிடித்து அந்த இளைஞன் சீண்டியுள்ளான். சிறுமி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அவன் சிறுமியை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளான். பின்னர் சிறுமி மேலிருந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடினான்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குற்றவாளி ரியாஸ் கான் தனது கொடூரச் செயலை ஒப்புக்கொண்டான். 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட அவனைப் போலீசார் பொதுமக்கள் முன்னிலையில் அழைத்துச் சென்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்ட மக்கள் அந்த காமக் கொடூரனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *