ஸ்மார்ட்போன் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கும் 4 ஈஸி ஹேக்குகள் இதோ

ஸ்மார்ட்போன் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கும் 4 ஈஸி ஹேக்குகள் இதோ

விலை அதிகமான அல்லது மலிவான எந்த வகை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், சார்ஜ் பிரச்சனை என்பது பொதுவானது. இருப்பினும், சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தேவையற்ற மின் நுகர்வைக் குறைப்பதும், சாதனத்தை சரியாக நிர்வகிப்பதும் – இந்த இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் போனின் சார்ஜை நீண்ட நேரம் நீடிக்க வைக்க முடியும்.

போனின் பேட்டரி லைஃபை அதிகரிக்க, ஸ்கிரீன் பிரைட்னஸை தேவைக்கு அதிகமாக வைக்காமல் இருப்பது அவசியம். மேலும், தேவையில்லாத ஆப்ஸ்கள் மற்றும் பேக்ரவுண்டில் இயங்கும் செயல்பாடுகளை நிறுத்துவதும் முக்கியம். அத்துடன், தேவை இல்லாதபோது Location, Bluetooth, Wi-Fi, மற்றும் Mobile Data ஆகியவற்றை அணைத்து வைப்பதும் சார்ஜ் சேமிக்க உதவும். அவசர காலத்தில் ‘பேட்டரி சேவர் மோட்’ (Battery Saver Mode) பயன்படுத்துவதும் பயனுள்ள நடவடிக்கையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *