உள்ளே உறைந்த அடைப்பை நீக்க! இதய ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த 5 எளிய வீட்டு வைத்தியங்கள்

அண்மைக் காலமாக, இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் பாதிப்புகள் கவலைக்குரிய அளவில் அதிகரித்து வருகின்றன. மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிக மன அழுத்தமே இந்த சிக்கல்களுக்கு முக்கியக் காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் படிந்து இரத்தம் செல்வதைத் தடுக்கும் அடைப்பே (Blockage) இந்த பிரச்சனைகளின் மூலமாகும்.
இதய இரத்த நாளங்களில் உள்ள அடைப்பைக் கரைக்க சில வீட்டு வைத்தியங்கள் மிகவும் பயனுள்ளவை. தினமும் காலையில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் துணைபுரிகிறது. அர்ஜுனப் பட்டையை (Arjuna Bark) வெந்நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து அருந்துவது அடைப்புகளை நீக்க உதவுகிறது. மேலும், இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும் அடைப்புகளைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை, பூண்டு மற்றும் மாதுளை ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.