3 வயது சிறுமி யானையிடம் பால் குடித்த அதிசயம்! வைரலாகும் அசாம் காட்சி, என்ன நடந்தது தெரியுமா?

3 வயது சிறுமி யானையிடம் பால் குடித்த அதிசயம்! வைரலாகும் அசாம் காட்சி, என்ன நடந்தது தெரியுமா?

அசாமின் கோலாகாட்டில் ஒரு குழந்தையும், வளர்ப்பு யானையும் இடையே உள்ள அபூர்வமான பாசப் பிணைப்பு சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. 3 வயதான ஹர்ஷிதா போரா, அவர்களின் வீட்டில் கட்டிப் போடப்பட்டிருக்கும் ‘பீனு’ என்ற யானையுடன் அடிக்கடி விளையாடுகிறார். சமீபத்தில் வைரலான காணொளியில், பால் குடிக்கும் ஆசையுடன் ஹர்ஷிதா யானையின் மடுவை பிடித்து இழுக்கிறார், மேலும் யானையும் குழந்தைக்கு பால் குடிக்க அனுமதி அளிக்கிறது. தாய்-சேய் போன்ற இந்த பாசமிகு தருணம் பலரின் மனதை வென்றுள்ளது.

எனினும், ஒரு பிரிவினர் கவலை தெரிவித்துள்ளனர். அசாமில் மனித-யானை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் (2021-ல் 100 பேர் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது), இத்தகைய நெருக்கம் குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *