5 குழந்தைகளுக்கு தாய்! 18 வயது காதலனுடன் கணவர் முன்னிலையில் நடந்த திருமணம்!
December 7, 2025

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர்நகரில் ஐந்து குழந்தைகளின் தாயார் ஒருவர், தனது 18 வயது காதலனை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக காதலில் இருந்த பெண், தனது காதலன் நிகிலுடன் வாழ முடிவு செய்தார். இதையறிந்த கணவர் அம்பேத்கர்நகருக்கு வந்தபோதும், மனைவி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து, கணவர் முன்னிலையிலேயே புதன்கிழமை அன்று ராம்நகரில் உள்ள சிவ ஆலயத்தில் அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கணவரே மனைவியின் கையை காதலனிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து குழந்தைகளுடன் வீடு திரும்பினார். தாயின் இந்த துணிச்சலான திருமணமும், கணவரின் இந்தச் செயல்பாடு அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.