8th Pay Commission பற்றிய வதந்தி தகவலா மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் சமீபகாலமாக ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசு நிதிச் சட்டம் 2025-ன் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் 8வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) பலன்களை நிறுத்திவிட்டது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த வதந்தி ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு அதனைப் போலியானது என அறிவித்துள்ளது.
மத்திய அரசு DA அல்லது 8வது ஊதியக் குழுவின் பலன்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று PIB தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட PSU ஊழியர்களுக்கு மட்டுமே திருத்தப்பட்ட விதிகள் பொருந்தும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பறிமுதல் செய்யப்படலாம். ஆனால், பொது ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு DA மற்றும் ஊதியக் குழுவின் பலன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.