8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துமா
December 18, 2025

மத்திய அரசு ஊழியர்களிடையே 8வது ஊதியக்குழு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஊதிய நிர்ணயத்தில் ‘பிட்மென்ட் ஃபேக்டர்’ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 1.92, 2.08 மற்றும் 2.86 ஆகிய மூன்று விகிதங்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை பெருமளவு உயர்த்தக்கூடும்.
அரசு 2.86 பிட்மென்ட் ஃபேக்டரை அமல்படுத்தினால், குறைந்தபட்ச ஊதியம் ₹18,000-லிருந்து ₹51,480 வரை உயர வாய்ப்புள்ளது. இதனால் குரூப்-A முதல் குரூப்-D வரையிலான ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கும். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.