51 வயது வித்தியாசம் இருந்தாலும் 77 வயது முதியவருடன் காதலில் விழுந்த 26 வயது இளம்பெண்

அமெரிக்காவின் சான் டியாகோவைச் சேர்ந்த 26 வயது டயானா மொண்டானோ மற்றும் 77 வயது எட்கர் இடையிலான காதல் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2023-இல் தொடங்கிய இவர்களது உறவு, டயானாவின் பிறந்தநாள் வீடியோ வெளியான பிறகு வைரலானது. பலரும் இவர்களது வயது வித்தியாசத்தை விமர்சித்தாலும், எட்கரின் முதிர்ச்சியான மனநிலை மற்றும் புத்திசாலித்தனம் தன்னை ஈர்த்ததாக டயானா உறுதியாகக் கூறுகிறார்.
தொடக்கத்தில் டயானாவின் குடும்பத்தினர் இந்த உறவை ஏற்க மறுத்தாலும், பின்னர் எட்கரை நேரில் சந்தித்த பிறகு சம்மதம் தெரிவித்தனர். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலே ஒரு உறவின் அடிப்படை என இந்த ஜோடி நம்புகிறது. 2025-இல் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டாலும், திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விமர்சனங்களை கடந்து இந்த ஜோடி தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.