4 கோடி பேரல் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டும் சர்வதேச சந்தையில் விலை குறையாதது ஏன்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) தனது கையிருப்பிலிருந்து 40 கோடி பேரல் எண்ணெயை சந்தையில் விடுவித்துள்ளது. இருப்பினும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை நெருங்கியுள்ளது. இருப்பு எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டும் சந்தையில் நிலவும் விநியோகத் தடங்கல் குறித்த அச்சமே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் மற்றும் ஈராக், குவைத் போன்ற நாடுகளின் உற்பத்தி குறைப்பு ஆகியவை நிலைமையை மோசமாக்கியுள்ளன. கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால் விலை 200 டாலர் வரை உயரக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த மோதல் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், கச்சா எண்ணெய் விலை நிரந்தரமாக 120 டாலர் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.