35 ஆண்டுகளுக்குப் பின் தரையிறங்கிய மர்ம விமானம்: உள்ளே பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி!

35 ஆண்டுகளுக்குப் பின் தரையிறங்கிய மர்ம விமானம்: உள்ளே பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி!

‘சாண்டியாகோ பிளைட் 513’ விமானத்தின் மர்மம் உலகையே உலுக்கிய ஒரு நிகழ்வாக இன்றும் பேசப்படுகிறது. 1954 செப்டம்பர் 4 அன்று, 92 பயணிகளுடன் ஜெர்மனியிலிருந்து பிரேசில் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.

பல வாரங்கள் தேடியும் விமானத்தைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காததால், அது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சரியாக 35 ஆண்டுகளுக்குப் பிறகு 1989-ல், அந்த விமானம் திடீரென பிரேசிலின் போர்டோ அலெக்ரே விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.

விமான நிலைய அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்தபோது கண்ட காட்சி அவர்களை உறைந்து போகச் செய்தது. விமானத்தில் இருந்த 92 பயணிகளும் தங்கள் இருக்கைகளிலேயே எலும்புக்கூடுகளாகக் கிடந்தனர். அதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், விமானத்தை இயக்கிய விமானியும் தனது இருக்கையில் எலும்புக்கூடாகவே அமர்ந்திருந்தார்.

இந்தச் செய்தி இன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தாலும், ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு கற்பனைக் கதை என்று மறுக்கின்றனர். உண்மையில், ‘வீக்லி வேர்ல்ட் நியூஸ்’ (Weekly World News) என்ற பத்திரிகை தனது விற்பனையை அதிகரிப்பதற்காக உருவாக்கிய ஒரு புனைவுக் கதையே இது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *