26 வகை பாம்புகளின் விஷத்தை முறிக்கும் ஒரு துளி கண்ணீர்! இந்த விலங்கின் அதிசய சக்தி தெரியுமா

26 வகை பாம்புகளின் விஷத்தை முறிக்கும் ஒரு துளி கண்ணீர்! இந்த விலங்கின் அதிசய சக்தி தெரியுமா

ஒட்டகத்தின் கண்ணீரில் மறைந்துள்ள மருத்துவ ரகசியம் தற்போது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிகானேரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் (NRCC) மற்றும் லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வில், ஒட்டகத்தின் கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் 26 வகையான நச்சுப் பாம்புகளின் விஷத்தை முறிக்கும் திறன் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஒட்டகத்தின் கண்ணீர் உலகின் மிகவும் விலையுயர்ந்த விலங்குப் பொருளாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக ‘சா-ஸ்கேல்டு வைப்பர்’ போன்ற ஆபத்தான பாம்புகளின் விஷத்திற்கு எதிராக இது சிறப்பாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாம்புக்கடியால் ஏற்படும் ஆயிரக்கணக்கான மரணங்களைத் தடுக்க இந்த ஆராய்ச்சி ஒரு மைல்கல்லாக அமையும். இந்த அதிசய கண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மேலும் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *