2025ல் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அம்பானி மற்றும் அதானியின் அதிரடி முன்னேற்றம்

2025ல் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அம்பானி மற்றும் அதானியின் அதிரடி முன்னேற்றம்

2025 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு மாறுபட்ட ஆண்டாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு 16.50 பில்லியன் டாலர் லாபம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார். ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபியிடமிருந்து க்ளீன் சிட் பெற்ற கௌதம் அதானி, 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் வலுவான மீண்டு வருகையை பதிவு செய்துள்ளார். லக்ஷ்மி மிட்டல் மற்றும் சுனில் மிட்டல் ஆகியோரும் கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளனர்.

அதேவேளையில், ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த சிவ நாடார் மற்றும் அசிம் பிரேம்ஜி ஆகியோர் பெரும் சரிவைச் சந்தித்துள்ளனர். எச்சிஎல் மற்றும் விப்ரோ பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் அவர்களின் சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் குறைந்துள்ளது. டிஎல்எஃப்-ன் கே.பி. சிங் மற்றும் சன் பார்மாவின் திலீப் சங்வி ஆகியோரும் இந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *