இந்தியாவின் கடல்சார் பலத்தை நிரூபிக்க வரும் எஸ்4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

இந்திய கடற்படையின் பலத்தை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான எஸ்4 தனது கடல்சார் சோதனைகளை விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. சுமார் 7,000 டன் எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், 3,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 8 கே-4 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு நிலையை உலகிற்கு பறைசாற்றுகிறது.
இந்த சோதனைகள் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், 2027-28 ஆம் ஆண்டில் இது இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎன்எஸ் அரிதமன் 2026 இல் சேவையில் இணைய உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து எஸ்4 நீர்மூழ்கி கப்பலும் இணையும். இதன் மூலம் கடலில் இருந்து அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறன் மேலும் வலுப்பெற்று, நாட்டின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய அரணாக இது திகழும்.