13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த வாலிபருக்கு கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி
March 11, 2026

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஹரீஷ் ராணா கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், அவரை கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2013-ல் விடுதி மாடியிலிருந்து விழுந்து மூளை பாதிக்கப்பட்ட அவர், எவ்வித முன்னேற்றமும் இன்றி செயற்கை சுவாச கருவிகள் மூலம் உயிர் வாழ்ந்து வந்தார்.
தற்போது அவரது பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, எய்ம்ஸ் மருத்துவர்களின் மேற்பார்வையில் உயிர் காக்கும் கருவிகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இம்முறையில் கருணை கொலைக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.