வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் தொடரும் சோகம் முதல் மலையிலேயே முதியவர் உயிரிழந்த அதிர்ச்சி

வெள்ளியங்கிரி மலையேற்றத்தில் தொடரும் சோகம் முதல் மலையிலேயே முதியவர் உயிரிழந்த அதிர்ச்சி

கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள புனித தலமான வெள்ளியங்கிரி மலையில் இன்று மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் கெம்பட்டியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் முதல் மலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த ஆண்டில் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது நிகழும் மூன்றாவது மரணம் இது என்பதால் பக்தர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரடுமுரடான மற்றும் நீண்ட தூர மலையேற்றப் பாதை என்பதால் உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவது ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் இதேபோன்று உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விபரீதம் நிகழ்ந்துள்ளது. வனத்துறையினர் டோலி தொழிலாளர்கள் உதவியுடன் உடலை கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு முறையான உடல் பரிசோதனைக்குப் பிறகே மலையேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *