விமான என்ஜினில் கோழிகள் வீசப்படுவது ஏன் மர்மமா அல்லது அறிவியலா

விமான என்ஜினில் கோழிகள் வீசப்படுவது ஏன் மர்மமா அல்லது அறிவியலா

விமானங்களின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்ய ‘சிக்கன் கன்’ (Chicken Gun) எனப்படும் ஒரு விசித்திரமான சோதனை நடத்தப்படுகிறது. இதில் அழுத்தப்பட்ட காற்று பீரங்கி மூலம் இறந்த கோழிகள் விமான என்ஜின் மற்றும் விண்ட்ஷீல்ட் மீது வீசப்படுகின்றன. பறவைகள் விமானத்தின் மீது மோதுவதால் ஏற்படும் ‘பேர்ட் ஸ்டிரைக்’ (Bird Strike) பாதிப்புகளை என்ஜின் தாங்குமா என்பதை உறுதி செய்ய இந்த அறிவியல் சோதனை பல தசாப்தங்களாகப் பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களில் பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இச்சோதனை மிகவும் அவசியமானது. ஒரு புதிய என்ஜின் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், இத்தகைய மோதல்களைத் தாங்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *