வழுக்கைத் தலை மற்றும் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜப்பானின் விசித்திரக் கோவில் இணையத்தில் வைரல்

வழுக்கைத் தலை மற்றும் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஜப்பானின் விசித்திரக் கோவில் இணையத்தில் வைரல்

ஜப்பானின் கியோட்டோ நகரில் அமைந்துள்ள ‘மிகாமி கோவில்’ அதன் விசித்திரமான வழிபாட்டு முறைக்காக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1960-ல் கட்டப்பட்ட இக்கோவில் ஜப்பானின் முதல் சிகையலங்கார நிபுணரான புஜிவாரா உனெமெனோசுகே மசாயுகிக்காக அர்ப்பணிக்கப்பட்டது. சொத்து அல்லது வெற்றியைக் காட்டிலும், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் முடி வளர்ச்சியை வேண்டி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இங்கு வரும் பக்தர்கள் ‘கம்பட்சு’ என்ற சடங்கின் மூலம் ஒரு கவரில் தங்கள் பெயருடன் ஒரு சிறிய முடி கற்றையை வைத்து பூசாரியிடம் ஒப்படைக்கின்றனர். ஷின்டோ பூசாரி அந்த முடியை வைத்து சிறப்பு பூஜை செய்து ஆசி வழங்குகிறார். சிகையலங்கார நிபுணர்களும் தங்களது தொழில் மேம்பட இங்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *