வளர்ப்பு நாயின் உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இரு சகோதரிகள் தற்கொலை
December 31, 2025

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜலால்பூர் பகுதியில் செல்லப்பிராணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தில் இரண்டு சகோதரிகள் பினைல் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 25 வயதான ராதா மற்றும் அவரது தங்கை ஜியா ஆகிய இருவரும் தங்களது வளர்ப்பு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் உடல்நலை குறித்து மிகுந்த கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் ஒரு மகனை இழந்த இந்த குடும்பம் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இவர்களின் தந்தை நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நிலையில் இந்த விபரீத முடிவு ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.