வளர்ந்தும் பயனில்லை! தனிநபர் வருமானத்தில் இந்தியாவை விட பின்தங்கிய நமிபியா

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருந்தாலும், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மிகவும் பின்தங்கி உள்ளது. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026-ன் படி, இந்தியாவின் மொத்த தேசிய வருமானத்தில் 58% உச்சத்தில் உள்ள 10% பணக்காரர்களிடம் செல்கிறது. ஆனால், அடித்தட்டில் உள்ள 50% மக்களுக்கு வெறும் 15% மட்டுமே கிடைக்கிறது. இந்த தீவிர வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு மத்தியில், தனிநபர் வருமானத்தில் ஆப்பிரிக்க நாடான நமிபியாவை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது.
2025 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் $2,820 ஆக உள்ளது. அதே சமயம், நமிபியாவின் தனிநபர் வருமானம் சுமார் $4,820 ஆகும். அதாவது, ஒரு சராசரி இந்தியரை விட ஒரு நமிபியர் கிட்டத்தட்ட 1.7 மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார். இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 1.4 பில்லியன் என்பதால், பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும் தனிநபர் வருமான விநியோகத்தில் சிக்கல் உள்ளது. ஆனால் நமிபியாவின் மக்கள் தொகை வெறும் 3 மில்லியன் மட்டுமே.