வரதட்சணை கொடுமையால் நிகழும் கொலைகள் சமூகத்தின் சாபக்கேடு என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
March 27, 2026

வரதட்சணை மரணங்களை சமூகத்தின் மீதான கறை என்று வர்ணித்துள்ள உச்ச நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. சட்டத் தடைகள் இருந்தபோதிலும், வரதட்சணை பேராசையினால் ஆயிரக்கணக்கான பெண்கள் கொல்லப்படுவது மனித உரிமைகளை மீறும் செயல் என்று நீதியரசர்கள் ஜே.பி. பார்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு கடுமையாக சாடியுள்ளது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உயிரிழந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக சரணடைய உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், இத்தகைய சமூகத் தீமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.