வந்தே மாதரம் பாடல் வரிகள் சிதைக்கப்பட்டதா வெடித்தது புதிய சர்ச்சை

வந்தே மாதரம் பாடல் வரிகள் சிதைக்கப்பட்டதா வெடித்தது புதிய சர்ச்சை

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘வந்தே மாதரம்’ தொடர்பான புதிய வழிகாட்டுதலில், தேசியப் பாடலின் வரிகள் தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவின் ‘ஆனந்தமடம்’ நாவலில் உள்ள அசல் வரிகளுக்கும் அரசின் குறிப்பிற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை அக்கட்சி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இது வங்காள கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலை அவமதிக்கும் செயல் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுவதாக அம்மாநில கல்வி அமைச்சர் பிரத்ய பாசு தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத் தாகூரின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சியே இது என அவர் விமர்சித்துள்ளார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக தரப்பு, தேசப்பற்று மிக்க ஒரு பாடலை கௌரவிப்பது மற்றவர்களை இழிவுபடுத்துவதாகாது என்று பதிலடி கொடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *