வங்கதேசத்தில் பிஎன்பி அமோக வெற்றி
February 13, 2026

வங்கதேச பொதுத்தேர்தலில் தாரேக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. நள்ளிரவு வரை வெளியான முடிவுகளின்படி, பிஎன்பி 171 இடங்களிலும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பிஎன்பி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட முகமது யூனுஸ் அரசின் நிர்வாக சீர்திருத்த மசோதாவிற்கும் பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.