ரோஹித் மற்றும் கோலியின் ஆட்டத்தை காண மோதல் வெறும் 8 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன டிக்கெட்டுகள்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 நிமிடங்களிலேயே 35,000 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்துள்ளன. 2026 ஆம் ஆண்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் ஜனவரி 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 11 அன்று வதோதராவில் நடைபெறுகிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரோஹித் மற்றும் விராட் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அணியில் ஷுப்மன் கில் மீண்டும் இணைய வாய்ப்புள்ள நிலையில், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ-ஹாட்ஸ்டாரில் நேரலையாகக் காணலாம்.