ரீல்ஸ் செய்யத் தடுத்த கணவன் கொலை, சமூக வலைதள மோகத்தால் சிதைந்த குடும்பம்

செய்தி பிரிவு : சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காக அலைவது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. மத்திய பிரதேசத்தின் ஜாபுவாவில், ரீல்ஸ் பதிவிடத் தடுத்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். யூடியூபில் கொலை செய்வது எப்படி என்று தேடிப் பார்த்து, தனது கணவரின் தலைப்பாகையாலேயே அவரைக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம், சாதாரண மனிதர்களிடையே அதிகரித்து வரும் சமூக வலைதள போதை, நிஜ வாழ்க்கை உறவுகளை எவ்வளவு மோசமாகப் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
திருமண நிகழ்ச்சி ஒன்றில் தான் ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர கணவன் மறுத்ததே இந்த விபரீதத்திற்குத் தொடக்கம். விசாரணையில் மனைவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெய்நிகர் உலகின் மீதுள்ள அதீத மோகம், ஒரு சாதாரண குடும்பத்தின் மகிழ்ச்சியை எப்படிச் சிதைக்கும் என்பதற்கு இந்தச் சோகமான நிகழ்வு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.