ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கடும் அமளி
February 13, 2026

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளார். ராகுல் காந்தி சோரோஸ் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ராகுல் தேர்தலில் போட்டியிடும் உரிமையை வாழ்நாள் முழுவதும் பறிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி பாஜகவின் இந்த நடவடிக்கை ராகுலை பாதிக்காது என்று கூறியுள்ளார். முன்னதாக மஹுவா மொய்த்ராவின் பதவி பறிக்கப்பட்ட போதும் நிஷிகாந்த் துபே முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.